Wednesday, February 13, 2013

                                                          பேராசிரியர் சு.தளபதி

                                கவிஞர் இங்குலாப் ஐயாவுடன் பேரா.சு.தளபதி
                        எழுத்தாளர் தா.செல்வராசு அவர்களுடன் பேரா.சு.தளபதி.

Sunday, February 10, 2013

ஐந்தாம்தமிழ்ச்சங்கம் "எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம்"

      சென்னையை அடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில், எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் 2010 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.  கல்வியாளரும் சமூகச் சிந்தனையாளருமாகிய 'பாரிவேந்தர்' என்று அழைக்கப்படுகின்ற, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர்,  டாக்டர் டி.ஆர்.பச்சமுத்து அவர்கள் தமிழ்ப்பேராயத்தின் புரவலராக உள்ளார். அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் கணினித்தமிழ் அறிஞருமான டாக்டர்.மு.பொன்னவைக்கோ அவர்கள் தமிழ்ப்பேராயத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ்ச்சங்கம் என்றால் எத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ,  அத்தகையப்பணிகளைச் சீரிய முறையில் மேற்கொண்டு,  இதற்கு முந்தையத் தமிழ்ச்சங்கங்களில் நேர்ந்த குறைபாடுகளைத் தவிர்த்து, தமிழ்ச்சமூக மேம்பாட்டைத் தலையாயதாகக்கொண்டு, அடுத்தத் தலைமுறைகளுக்கு தமிழின் விழுமியங்களைக் காத்தியம்பும் கடமைகளை தமிழ்ப்பேராயம் மேற்கொண்டு வருகின்றது.
     தமிழ்ப்பேராயத்தின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் ஆண்டாகத் தொடங்கியது. ரூபாய் பத்தொண்பது இலட்சங்கள் ரொக்கப் பரிசு, பாராட்டுப்பத்திரம், நினைவுக்கோப்பை, முதலியன அடங்கிய மொத்தம் பத்துவிருதுகள் அறிவிக்கப்பட்டன. இலக்கியத்திற்கு இந்தியஅரசு அளிக்கும் பரிசுத்தொகையைவிட, தமிழ்ப்படைப்பு களுக்கும் படைப்பாளிகளுக்கும் அதிக பெருமையளிக்கக் கருதிய செயல் இவ்விருதுகளுக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. வருங்காலங்களில் இவ்விருதுத்தொகை மேலும் அதிகரிக்கவும் புதிய விருதுகள் அறிவிக்கவும் திட்டங்கள் உள்ளன. இப்பேராயத்தின் பிற சிறப்புப் பணிகள்: கணினித்தமிழ்க் கல்வியை தரமாகவும், குறைந்த கட்டணத்திலும் அனைவருக்கும் கொண்டு செல்வது. கணினிப் பயன்பாட்டுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்குவது. அரிய நூல்கள், ஆய்வுநூலகள், அகராதிகள், மொழிபெயர்ப்புகள், சிறந்தநூல்கள் ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது. தமிழ் அருட்சுனைஞர், ஓதுவார், பட்டயப் படிப்பு மற்றும் பயிற்சி வழங்குதல். புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறைகளுக்கு தமிழ் மொழி கற்பித்தலுக்குப் பாடநூல்கள் தயாரித்தல், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சி வழங்குதல். சாதனைத்தமிழர்களை அழைத்துப் பாராட்டுவது. எதிர்காலச் சாதனையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து ஆதரவளிப்பது. தமிழ்மொழி மேம்பாடு கருதி கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், மாநாடுகள், ஆய்வரங்குகள், சான்றிதழ்-பட்டய-பட்டப் படிப்புகள் நடத்துதல். 

  இத்தனையும் திட்டங்களாக மட்டுமல்ல, செயல்படுத்தப் பட்டவைகளாக, நடைமுறையில் உள்ளனவாக தமிழ்ப்பேராயத்தில் அறியமுடிகின்றன. எனவேதான் இப்பேராயத்தினை ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக வேந்தர் ஐயா அறிவித்து ஆதரவளிக்கிறார். ஆன்ற தமிழறிஞர்கள் குழுக்களை அமைத்து, அரியபணிகளைச் செய்யும் செயற்குழுக்களைக் கொண்டு இவ்வமைப்பினை நெறிப்படுத்துகிறார் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர்.மு.பொன்னவைக்கோ அவர்கள்.

Sunday, January 20, 2013

சென்னை புத்தகக்காட்சி (36வது), நந்தனத்தில்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், வாகன நிறுத்து நிலையங்கள், உணவகங்கள், பட்டானி சுண்டல் பார்ட்டிகள் முகங்களில் காணும் மகிழ்ச்சி,  உள்ளே சில புத்தக நிலையங்களில் இல்லை!

சிறந்த படைப்பாளிகளின் பெயர்களில் வீதிகள்! 700க்கும் மேலான கடைகள்! பிரம்மாண்டம்...!


எழுதியவர்களுக்கு (விலையில் அல்ல) இலாபத்தில் பாதி பங்குப் பணமாவது  கிடைப்பது உறுதி என்றால், ஏழை எழுத்தாளர்களே தமிழ்ச்சாதியில் இல்லை என்று கொட்டலாம் முரசு!அப்படி இருக்கிறது நூலகளின் விலை!


எல்லாமே அப்படித்தான்யா.. என்று நீங்க சொல்லுவது எனக்குக் கேட்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் சொல்லவும் சிந்திக்கவும் செய்திடும் நூலகளுக்கே இந்த நிலை என்பதுதான் வேதனை!


அடுத்த புத்தகக் காட்சியிலாவது, கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, சிற்றிதழ் என்ற வகைப்பாட்டில் ஒரு வீதி முழுவதும் இலக்கிய வகை அடிப்படையில் கடைகள் வையுங்கள்.