Monday, November 5, 2012

நகைச்சுவைதான் நலமானது.!?

வணக்கம் நண்பர்களே! 

     நகைச்சுவை தொலைக்காட்சிகளுக்குப் பதிலாக அந்தந்தக் கட்சிகளின் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே போதும். ஆத்திரப்படாமல் இரசிக்கப் பழகுங்க. நேரலை நகைச்சுவை காட்சிகள் வேண்டுமா? . கட்சித் தொலைக்காட்சிகளின் நேர்காணல்களைப்  (பேட்டிகளை) பாருங்கள். மேதாவிகள் கூட, கோமாளிகளாக மாறிவிடுவார்கள். நேர்காண்பவர், விருந்தினர் இவர்களில் யார் புத்திசாலி? என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் சிரிப்பு வரும். பணத்திற்காக, பதவிக்காக பல் இளிப்பதும் அரிதாரம் பூசுவதும் சிறந்த கேலிச்சித்திரங்கள். சட்டசபையில் கைத்தட்டுவதற்கும்,  முதல்வரைக் காண்கையில் குனிந்துகொண்டே செல்வதற்கும்   பயிற்சியும்,ஒத்திகையும் எங்கே எடுத்திருப்பார்கள்?. அந்தப் புகைப்படத்தையும், காட்சிகளையும் எப்படி பத்திரப்படுத்துவார்கள்?  மற்றவர்களிடம் எப்படிக் காட்டுவார்கள்?. 

        அரசியல் கட்சிகளின், ஆட்சியாளர்களின் விளம்பரங்களால் எதை விளங்க வைக்கப் பார்க்கிறார்கள்? சம்பந்தப்பட்டவர்களுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பயனற்ற பல விளம்பரங்க்களால் யாருக்கு என்ன லாபம்? அண்மைச்செய்தி, சற்றுமுன், அடிவரிச்செய்தி, செய்திக்குறிப்பு, நேரடித்தகவல், நமது சிறப்புச்செய்தியாளர்,   செய்தித்தொகுப்பு, நடந்தது என்ன?, குற்றத்தின் பின்னணி, நிஜம், உண்மைச்சம்பவம், இப்படி வளரும் செய்தி, படம், காட்சி, கைபேசி, இணையதளம்... இப்படி வரலாறாகவும் ஆவணமாகவும் உருவாகிவிடும். விழிப்புணர்வு, எச்சரிக்கை, நடவடிக்கை, புதுச்சட்டம், அதிகாரிகளின் வருகை, புதிய ஆணைகள், இவையும் நடைபெறும். பாதிக்கப்பட்டவருக்கு வருமானம், அவமானம், இழப்பு, இழிவு இவை அத்தனைக்கும் மேல் பின்னணியில் இயங்கும் அரசியல்!  இவற்றோடு ஊடகங்களின் சந்தைப்போட்டி, நேயர்களை தக்கவைக்கும் நெருக்கடி முதலியவற்றால் நகைச்சுவை மேலும் அதிகரிக்கின்றன...(நான் இங்கே குறிப்பிடுவன அரசியலும் அரசியல் சார்ந்தும்)

      அறிவிப்பும், மாற்றங்களும், நடைமுறைகளும் நாளுக்குநாள் வியப்பாகவும் விகடமாகவும் இருக்கின்றன. சிந்தித்துப் பார்த்தால் சினம் வரும். ஆனால் உங்கள் சினத்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைவிட, வேறு எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை! எனவே சிரியுங்கள். மன அமைதிக்கு.. ஒரு பாடல் வரி யாரைத்தான் நம்புவதோ...

No comments:

Post a Comment