Wednesday, December 26, 2012
Wednesday, December 19, 2012
அரசு சார்ந்தவரென்றால் அதிகமாகிவிடுமா...தகுதி?
தவறுகள் தட்டிக் கேட்கப்பட வேண்டும் - என்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின். பாரதியாரின் பிறந்தநாள் உரையினைப் படித்த உற்சாகத்தில், நடுப்பக்கக் கட்டுரை (12-12-12) ”துணைவேந்தரைத் தெரிவு செய்ய...” - முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களது கட்டுரை படித்தேன். விருந்துணவு படைத்த இலையில் விடம் வைத்தது போல் உள்ளது கண்டு இக்கடிதம் எழுதுகிறேன்.
பல்கலைக்கழகம் என்றால் என்ன? துணைவேந்தர் பொறுப்பு எத்தகையது? துணைவேந்தரைத் தேர்வு செய்வது எப்படி? என்ற வினாக்களைப் பின்னிறுத்தி, விடையளித்துள்ளார் கட்டுரை ஆசிரியர். இந்த செவியறிவுறூஉ... உரையில், ’தேர்ந்தெடுப்பது’ ’ஆய்ந்தெடுப்பது’ முதலான சொல்லாடல்களையும் அவற்றையே விளக்க உத்திகளாகவும் கையாண்டவர் தம் சொற்களில் அவற்றைப் புறக்கணித்தமை வருத்தமளிக்கிறது. செல்வாக்கிலும் சிபாரிசுகளிலும் சிம்மாசனம் ஏறிவிடும் கல்விமான்கள் காசு சேர்த்து, காலம் கழித்துச் செல்லும் பொழுதுபோக்காக துணைவேந்தர் பதவிகள் போய்விடக்கூடாது என்று மன்னருக்குப் புலவர் அறிவுறுத்துவது சரிதான், ஆனால், சுயநிதிக்கல்லூரி ஆசிரியர்களை (பேராசிரியர்கள் என்று கூடக் கட்டுரையில் குறிப்பிடத் தயங்கி) துணைவேந்தராக்கினால், ”அப்பதவி கொச்சைப்படுத்தப் படும்” என்றும் ”எதிர்காலம் இருண்டு போகும்” என்றும் அரசு தன் பொறுப்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களுக்குத் தான் அப்பதவி தகுதிவாய்ந்தது என வாதிடுவதும். வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே நிதி நெருக்கடிகளில் மூச்சுத்திணறும் பல்கலைக்கழகங்களுக்கு, தங்களின் மிகுதியான துறைகளின் இணைப்புக் கட்டணங்களாலும், அதிகமான மாணவர் சேர்க்கைக் கட்டணங்களாலும், தேர்வு மற்றும் இதரக் கட்டணங்களாலும் சுயநிதிக்கல்லூரிகள் தான் அவ்வப்போது பல்கலைக்கழகத்திற்கு சுவாசக்காற்றளிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களை உதாரணத்திற்கு, அது ஒரு என்.எஸ்.எஸ். திட்டமாக இருந்தாலும், சிரமேற்கொண்டு செவ்வனே செய்து முடிப்பது சுயநிதிக்கல்லூரிகள்தான். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுதவி பெறும் கல்லூரிகளை விட பன் மடங்கு புதிய பட்டவகுப்புகள், புதிய வசதிகள், போதுமான பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள், வளாக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இன்று அரசு கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்புகளைப் பெறும் பலரும் பணியாற்றிய அனுபவமும் தகுதியையும் வளர்த்துக் கொண்ட இடம் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தான். இதற்கு கட்டுரையாசிரியரும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் 200 க்கு மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 கலை அறிவியல் கல்லூரிகளும் சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. குறைவான ஊதியத்தில் அதிகமான நேரம் பணியாற்றி, அறிவும் திறனும் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோதும், சுயநிதிக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிறப்பும் பொறுப்பும் நிறைந்த மேலாண்மைத் திறனற்றவர்கள் என்று கட்டுரையாளர் கருதுவது நியாயமற்றது. கட்டுரையாளர் பெருமையாகக் கருதும் அரசு சார்ந்த அப்பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதும் சுயநிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்து கொள்வதை எவ்வாறு கருதுகிறார்? அங்கே அவர்களால் முடியாத பலவற்றை இங்கே சாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?. ஒரு அரசாங்கமோ.. பல்கலைக்கழகமோ செய்ய முடியாத பல ஆய்வுகளை, கருத்தரங்குகளை, மாநாடுகளை, சமூகப் பயன்பாடுகளை சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் சாதித்துக் காட்டுவதை, அன்றாடம் செய்தி ஊடகங்களை அக்கறையுடன் பார்ப்பவர்கள் அறிவார்கள். போகிறபோக்கில் சுயநிதிக் கல்வியாளர்களை இழிவுபடுத்தும் அரசியல் நுழைவு சரியானதல்ல.
கட்டுரையாளருக்கு எதிர்வினையாக அரசு சார்ந்த கல்வி நிறுவன மாணவர்களையும் பேராசிரியர்களையும் குறைத்து மதிப்பிடவில்லை. கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து வந்துவிட்ட சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் இன்று காலத்தின் கட்டாயம், நல்ல மனிதர்கள் நல்ல நோக்கங்களுடன் கல்விப் பணியைத் தொடங்கி வெற்றி கண்டு வருகிறார்கள். மாறாக அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் கவலைகிடமாகக் கிடக்கின்றன. கட்டுரையாசிரியர் இருபதாண்டுகளுக்குப் பின் பிறந்திருந்தால் ஒரு சுயநிதி கல்வி நிறுவனத்தில் படித்திருக்கும் வாய்ப்புக் நேர்ந்திருக்கும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததைப் போல. பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவில், ஆட்சி மன்றக்குழுவில், ஆட்சிக்குழுவில், பாடத்திட்டக்குழுவில், தேர்வுப்பணியில் மிகுதியானப் பங்கேற்பில், பயிற்சியில், செயலில், அனுபவத்தில் திறன் வெளிப்படுத்தும் சுயநிதிக் கல்வி நிறுவனத்தார்களால் ஏன் துணைவேந்தர் பொறுப்பிலும் தகுதி பெறமுடியாது?
மூன்று பட்ட வகுப்புகளுடன் தொடங்கும் சுயநிதிக்கல்லூரியை முதுகலைகள் உட்பட முப்பது துறைகளுடன் முன்னேற்றி, ஆய்வுத்துறைகளுடன் அக்கல்லூரியை ஒரு பல்கலைக்கழக அளவிற்கு உயர்த்தி அப்பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கும் முன்னோடிகளாகும் சுயநிதிக் கல்வி நிறுவனக் கல்வியாளர்கள் திறமையும் பொறுப்பும் அற்றவர்களா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் பொறுப்பு வகித்த 160 ஆண்டு கால வரலாற்றுப் பல்கலைக்கழகம் பழுதின்றி, குறைபாடுகளற்ற புகழொடுதான் திகழ்கின்றதா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் வருங்காலத்தில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இருந்தும் வருபவர்களாக இருப்பதை மறுக்கமுடியுமா? தடுக்க நினைப்பது தவறாகாதா?
-பேரா.சு.தளபதி,
தமிழ்த்துறைத்தலைவர்,
எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி. காட்டாங்குளத்தூர்.

Monday, November 5, 2012
நகைச்சுவைதான் நலமானது.!?
வணக்கம் நண்பர்களே!
நகைச்சுவை தொலைக்காட்சிகளுக்குப் பதிலாக அந்தந்தக் கட்சிகளின் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே போதும். ஆத்திரப்படாமல் இரசிக்கப் பழகுங்க. நேரலை நகைச்சுவை காட்சிகள் வேண்டுமா? . கட்சித் தொலைக்காட்சிகளின் நேர்காணல்களைப் (பேட்டிகளை) பாருங்கள். மேதாவிகள் கூட, கோமாளிகளாக மாறிவிடுவார்கள். நேர்காண்பவர், விருந்தினர் இவர்களில் யார் புத்திசாலி? என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் சிரிப்பு வரும். பணத்திற்காக, பதவிக்காக பல் இளிப்பதும் அரிதாரம் பூசுவதும் சிறந்த கேலிச்சித்திரங்கள். சட்டசபையில் கைத்தட்டுவதற்கும், முதல்வரைக் காண்கையில் குனிந்துகொண்டே செல்வதற்கும் பயிற்சியும்,ஒத்திகையும் எங்கே எடுத்திருப்பார்கள்?. அந்தப் புகைப்படத்தையும், காட்சிகளையும் எப்படி பத்திரப்படுத்துவார்கள்? மற்றவர்களிடம் எப்படிக் காட்டுவார்கள்?.
அரசியல் கட்சிகளின், ஆட்சியாளர்களின் விளம்பரங்களால் எதை விளங்க வைக்கப் பார்க்கிறார்கள்? சம்பந்தப்பட்டவர்களுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பயனற்ற பல விளம்பரங்க்களால் யாருக்கு என்ன லாபம்? அண்மைச்செய்தி, சற்றுமுன், அடிவரிச்செய்தி, செய்திக்குறிப்பு, நேரடித்தகவல், நமது சிறப்புச்செய்தியாளர், செய்தித்தொகுப்பு, நடந்தது என்ன?, குற்றத்தின் பின்னணி, நிஜம், உண்மைச்சம்பவம், இப்படி வளரும் செய்தி, படம், காட்சி, கைபேசி, இணையதளம்... இப்படி வரலாறாகவும் ஆவணமாகவும் உருவாகிவிடும். விழிப்புணர்வு, எச்சரிக்கை, நடவடிக்கை, புதுச்சட்டம், அதிகாரிகளின் வருகை, புதிய ஆணைகள், இவையும் நடைபெறும். பாதிக்கப்பட்டவருக்கு வருமானம், அவமானம், இழப்பு, இழிவு இவை அத்தனைக்கும் மேல் பின்னணியில் இயங்கும் அரசியல்! இவற்றோடு ஊடகங்களின் சந்தைப்போட்டி, நேயர்களை தக்கவைக்கும் நெருக்கடி முதலியவற்றால் நகைச்சுவை மேலும் அதிகரிக்கின்றன...(நான் இங்கே குறிப்பிடுவன அரசியலும் அரசியல் சார்ந்தும்)
அறிவிப்பும், மாற்றங்களும், நடைமுறைகளும் நாளுக்குநாள் வியப்பாகவும் விகடமாகவும் இருக்கின்றன. சிந்தித்துப் பார்த்தால் சினம் வரும். ஆனால் உங்கள் சினத்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைவிட, வேறு எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை! எனவே சிரியுங்கள். மன அமைதிக்கு.. ஒரு பாடல் வரி யாரைத்தான் நம்புவதோ...
Wednesday, March 14, 2012
உண்டடா உலகு
நிலையில்லா உலகத்தில் நீ நிலைத்து நிற்பாய் வரலாற்றில். எவ்வாறு தெரியுமா? இனவெறி பிடித்த மனிதநெறி மறந்த மானுட மிருகமென்று ! . பொறுப்பைப் பயன்படுத்தி, மனிதகுலத் துரோகமாகத் தொடர்குற்றம் புரியும் அவனைத் தட்டிக்கேட்காமலும், அவனைத் தவறு செய்யாதவாறு தடுக்காமலும், மறைமுகமாகத் துணை நிற்கும் அண்டை அயோக்கியர் சூழ்ந்த உலகமே!
சொந்தமண், சுமந்த பெற்றோர், பழகிய வாழ்க்கை, பாடுபட்ட பிணைப்பு எல்லாம் சிதைத்த, செந்நீர் அருந்தும் சினத்தீயே! இருப்பவர்களைப் பற்றி சிந்திக்க வருவதாய் கபட நாடகமாடகிறாய். இழந்தவர்களைப் பற்றி, நாங்கள்பெறப் போவதைப்பற்றிச் சிந்திக்கிறோம். நடந்தனவெல்லாம் கதை என்கிறாயே, கடந்தனவெல்லாம் வரலாறு. வருங்காலம் வாசிக்க மறந்தாலும், எதிர்காலச் சொந்தங்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று சொல்லிக்
கொடுக்கும். குற்றங்கள் மீது உனக்கே பற்று நீங்கலாம். ஆனால் நீ குற்றவாளி என்பதிலிருந்து எவ்வாறு நீங்குவாய் ? நீயே விலகிச்செல்! நீயே மறைவாக மாண்டுபோ. மீண்டு வருவாய் என்றெண்ணி, மிஞ்சியிருக்கும் உன் இனம் அழிக்காதே!
அயலவர் எல்லோரும், உன்னைக் கயவன் என்று சொல்லும் போது, அருகிலிருப்பவன் துணைக்காக, உன்னைத் தூயவன் என்பது, உங்கள் வாழ்க்கைப் பிழையல்ல, வரலாற்றுப்பிழை. மன்னிப்பு என்பது உங்கள் மறுபிறவி வாழ்க்கையிலும் மறுக்கப்பட்டது. உண்டடா உலகு. திண்டாடும் நிலை வந்தாலும், துண்டாட நினைத்தாலும் உண்டடா உலகு. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தருமமே வெல்லும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி அழிக்கும். நேற்று உள்ளது இன்று இல்லை என்பது தானடா உலகத்தின் பெருமை. அநீதி உலகின் விளிம்பில் நிற்கும் நீவிர் நினைவில் கொள்க.
தமிழும் சரி தமிழனும் சரி உங்களுக்குப் பிடிக்காது. எம்மை அண்டிப் பிழைக்க வந்து ஆண்டையாய் ஆகிடத் துடிக்கும் ஆசையால். தமிழன் இரக்க உணர்வு படைத்தவன். இறக்க நிறைவு படைத்தவன் என்பதால் மலிவாக எண்ணிடாதே மானிடமே!
Wednesday, March 7, 2012
யுகங்களை மாற்றினாய்...
யுகங்களை மாற்றினாய்...
( சு.தளபதி )
· பேருந்து நிறுத்தங்களில்
மின்ரயில்நிலைய நடைமேடைகளில்
நீண்ட-அகல படிக்கட்டுகளில்
நெருக்கடி இடங்களில்
உருக்குலையாமல் கிடக்கும்
ஒற்றை ரோஜாக்கள்.
· அப்பனாகி தலைவியாய்
தவிக்கும் தருணங்களில்,
ஒப்பனைகளையும் மீறி
உழைப்புக்கு ஓடி,
உபரி வருமானத்தால்..
ஏன்.
அது ஒற்றை வருமானமாகக்கூட
இருக்கலாம்?
· சார்ந்து நின்றே
சோர்ந்துபோன-உன்
சாயல் மாறியது.
· மையல் கொள்ளும்
மயக்கம் மாறி
மையப்படுத்தப்படுகிறாய்.
· மனிதகுலம்தானா
என்ற ஐயம் மாறி
மனிதவளமாக
மதிக்கப்படுகிறாய்.
· சக்தி சொரூபங்களாய்..
உமையொரு பாகனாய்..
கடவுளாலும் காணமுடியாத போது
காலத்தாலும் கருத்தாலும்
கண்டும் கவனிக்கவும் படுகிறாய்.
· தேசமென்றோம்...
தேகமென்றோம்...
சொந்தம் கொண்டாடவும்
சுகப்படவும்.
· சுத்தமென்று
அசுத்தமாக்கியதும்,
தாய் என்று போற்றி
அழகென்று அடிமையாக்கி
பொறுமை என்று புகழ்ந்து
இயற்கை என்று ஏற்றி
கொண்டாடி..கொண்டாடி..
தொடர்ந்து உன்னை
தொண்டாற்றச் செய்தோம்.
· அணு ஆற்றலை
நுகர்பொருளாய்..
ரசனைகளின் நுனுக்கங்களில்,
மறுபுறம் மறைத்து
ரசம்பூசி வைத்தோம்.
· வெடித்தெழுந்து அடுக்கடுக்காய்
களங்களில் காளிகளாகி
வதங்களின் வாகைகளால்
யுகங்களை மாற்றினாய்
- சு.தளபதி.
Thursday, February 9, 2012
துணை வேந்தருக்கு வாழ்த்துக்கள்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேரா.முனைவர்.ம. திருமலை ஐயாவிற்கு வணக்கத்துடன் வாழ்த்துக்களை வழங்குவது, இந்நாள் பேராசிரியர் ஐயாவின் முன்னாள் மாணவர் சு. தளபதி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழுக்குச் செய்த தொண்டு தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆசிரியர் - மாணவர் உறவு நிலை உயர்வுப் பண்பாட்டை உருவாக்கிய தமிழ்த்துறையில் பெருமைக்குரியப் பேராசிரியர்கள் பலருண்டு. எண்பதுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் ஒரு குழு , அங்கேயே உருவான மாணவர்கள், பின் ஆய்வாளர்கள், பின் முனைவர் பட்டங்களுடன் அங்கேயே விரிவுரையாளர்கள்.. இப்படி வந்த குழுவில் ஒருவர்தான் திருமலை ஐயாவும். அவர்களது நட்பு, அவர்களது அறிவுத்திறனின் தனித்தன்மைகள், மாணவர்களாக இருந்த, அவர்களது பேராசிரியர்களுடனேயே பணியாற்றும் பெருமை..., இதையெல்லாம் பார்த்து, மனதுக்குள் பெருமிதம் கலந்த, தாங்களும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஏக்கம் நிறைந்தவர்களாக அக்கால கட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் மதிப்பு மிகுந்த காலம்.
நாங்கள் முதுகலை மாணவர்களாகச் சேர்ந்த ஆண்டில்(1986-87) திருமலை ஐயாவிற்குத் திருமணம். தமிழ்த்துறையே குடும்பமாகக் கொண்டாடியது. அவரது குல வழக்கப்படி நடந்த அத்திருமணக் காட்சிகள் இன்றும் எங்கள் மனதில் மகிழ்வூட்டும் காட்சிகளாக உள்ளன.
மிக இயல்பான மனிதர். தற்கால இலக்கியத் தாகம் தீராத தீவிர வாசிப்பு உடையவர். வகுப்பில் ஒரு நாவலைப் பற்றி விவரித்தால் போதும் நாங்கள் ஒரு படம் பார்த்ததைப்போல் உணர்வோம். எங்களைப் பல நாவல்களை வாசிக்கத் தூண்டியவர். வகுப்பறை தவிர, விடுதி - விளையாட்டு- விடுமுறை- சந்திப்புகளில், நாங்கள் குறிப்பாக நண்பர்கள் அழகிரி, ராஜபாண்டி, ரவி, முருகன் ஐயாவின் முகபாவனைகளில் செய்திகளைச் சொல்லிக்காட்டி ரசிப்போம்.
ஐயாவின் எளிமை, யதார்த்தம், கடின உழைப்பு, உதவும் மனநிலை இவையெல்லாம் அவரது கற்பித்தலுக்கும் கூடுதலாக அவர் எங்களுக்குத் தந்த பண்புகள். படித்த பல்கலையிலேயே பணியாலும் உயர்ந்த பேராசிரியர் இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே துணைவேந்தராக உயர்ந்ததில் உள்ளார்ந்த மகிழ்வை.. வாழ்த்தை.. வணக்கத்தை என் சார்பாகவும் என் நண்பர்கள் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)