இளைய தலைமுறையே! சமூக உணர்வாளர்களே! எப்போதும் நாம் விழிப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும்.
வேறு வேறு நியாயங்களைக் கூறி தொடர்ந்து தவறு செய்பவர்களாக நம்மை வைத்துக் கொள்வதில், தமிழக அரசியல் கட்சிகள் கவனமாக இருக்கின்றன! வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களாகவே காட்சியளிக்கும் இவர்கள் இனியும் மாறுவார்களா? !
தாங்கள் அறியாமையில், முட்டாள்தனமாக, போலித்தனமாக பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே அவ்வாறு பேசுகிறார்கள். இந்தச் செய்திகள் அன்றாடம் நாளிதழ்களை நகைச்சுவை இதழ்களாக மாற்றுகின்றன.
உலகச்சந்தை நமது நடுத்தர வர்க்கத்தை நாலைந்து வகையாகப் பிரித்து விட்டது. இது வளர்ச்சியை நோக்கியென்றால் வாழ்த்தலாம். வீழ்ச்சி யென்றால் ?? நசிங்கிப்போகும் நலிந்தோர் கூட்டம் ஒன்று இதில் உருவாகிக் கொண்டிருக்கிறது. களவும் ஏமாற்றமும் சாவும் அங்கு மிகுதியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வர்க்கத்து வகை தொகை மக்களை நோக்கித் தான் வங்கிகள் வலை விரிக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கொள்கை இதைப் பற்றி கவலை கொள்ளவில்லை!
இளைய தலைமுறையே! சமூக உணர்வாளர்களே! எப்போதும் நாம் விழிப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும்.
நம்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ... இல்லையென்றால், மற்றவையின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்து, நம்மை மீளத் தெரிந்தவர்களாக ... வைத்துக் கொள்வோம்!
No comments:
Post a Comment