பதம் - தளபதி
வணக்கம். உங்களை இந்த வலைப்பூவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Sunday, February 10, 2013
ஐந்தாம்தமிழ்ச்சங்கம் "எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம்"
சென்னையை அடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.
பல்கலைக்கழக வளாகத்தில், எஸ்.ஆர்.எம்.
தமிழ்ப்பேராயம் 2010 ஆம்
ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
கல்வியாளரும் சமூகச் சிந்தனையாளருமாகிய 'பாரிவேந்தர்' என்று அழைக்கப்படுகின்ற, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர், டாக்டர்
டி.ஆர்.பச்சமுத்து அவர்கள் தமிழ்ப்பேராயத்தின் புரவலராக உள்ளார்.
அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் கணினித்தமிழ் அறிஞருமான
டாக்டர்.மு.பொன்னவைக்கோ அவர்கள் தமிழ்ப்பேராயத்தின் தலைவராகவும் உள்ளார்.
தமிழ்ச்சங்கம் என்றால் எத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அத்தகையப்பணிகளைச்
சீரிய முறையில் மேற்கொண்டு, இதற்கு முந்தையத் தமிழ்ச்சங்கங்களில் நேர்ந்த
குறைபாடுகளைத் தவிர்த்து, தமிழ்ச்சமூக
மேம்பாட்டைத் தலையாயதாகக்கொண்டு, அடுத்தத்
தலைமுறைகளுக்கு தமிழின் விழுமியங்களைக் காத்தியம்பும் கடமைகளை தமிழ்ப்பேராயம்
மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்ப்பேராயத்தின் பல்வேறு திட்டங்களில்
ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் ஆண்டாகத் தொடங்கியது. ரூபாய் பத்தொண்பது
இலட்சங்கள் ரொக்கப் பரிசு, பாராட்டுப்பத்திரம்,
நினைவுக்கோப்பை, முதலியன அடங்கிய மொத்தம் பத்துவிருதுகள்
அறிவிக்கப்பட்டன. இலக்கியத்திற்கு இந்தியஅரசு,
அளிக்கும் பரிசுத்தொகையைவிட, தமிழ்ப்படைப்பு களுக்கும்
படைப்பாளிகளுக்கும் அதிக பெருமையளிக்கக் கருதிய செயல் இவ்விருதுகளுக்கு முதன்மைக்
காரணமாக அமைந்தது. வருங்காலங்களில் இவ்விருதுத்தொகை மேலும் அதிகரிக்கவும் புதிய
விருதுகள் அறிவிக்கவும் திட்டங்கள் உள்ளன. இப்பேராயத்தின் பிற சிறப்புப் பணிகள்:
கணினித்தமிழ்க் கல்வியை தரமாகவும், குறைந்த
கட்டணத்திலும் அனைவருக்கும் கொண்டு செல்வது. கணினிப் பயன்பாட்டுக்குத் தேவையான
தமிழ் மென்பொருட்களையும், தொழில்நுட்பங்களையும்
வழங்குவது. அரிய நூல்கள், ஆய்வுநூலகள்,
அகராதிகள், மொழிபெயர்ப்புகள், சிறந்தநூல்கள் ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது.
தமிழ் அருட்சுனைஞர், ஓதுவார், பட்டயப் படிப்பு மற்றும் பயிற்சி வழங்குதல்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறைகளுக்கு தமிழ் மொழி கற்பித்தலுக்குப் பாடநூல்கள்
தயாரித்தல், தமிழ்
கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சி வழங்குதல். சாதனைத்தமிழர்களை அழைத்துப் பாராட்டுவது.
எதிர்காலச் சாதனையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து ஆதரவளிப்பது. தமிழ்மொழி
மேம்பாடு கருதி கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள்,
மாநாடுகள், ஆய்வரங்குகள், சான்றிதழ்-பட்டய-பட்டப் படிப்புகள் நடத்துதல்.
இத்தனையும் திட்டங்களாக மட்டுமல்ல, செயல்படுத்தப் பட்டவைகளாக, நடைமுறையில் உள்ளனவாக தமிழ்ப்பேராயத்தில்
அறியமுடிகின்றன. எனவேதான் இப்பேராயத்தினை ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக வேந்தர் ஐயா
அறிவித்து ஆதரவளிக்கிறார். ஆன்ற தமிழறிஞர்கள் குழுக்களை அமைத்து, அரியபணிகளைச் செய்யும் செயற்குழுக்களைக் கொண்டு
இவ்வமைப்பினை நெறிப்படுத்துகிறார் தமிழ்ப்பேராயத்தின் தலைவர்
முனைவர்.மு.பொன்னவைக்கோ அவர்கள்.
Sunday, January 20, 2013
சென்னை புத்தகக்காட்சி (36வது), நந்தனத்தில்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், வாகன நிறுத்து நிலையங்கள், உணவகங்கள், பட்டானி சுண்டல் பார்ட்டிகள் முகங்களில் காணும் மகிழ்ச்சி, உள்ளே சில புத்தக நிலையங்களில் இல்லை!
சிறந்த படைப்பாளிகளின் பெயர்களில் வீதிகள்! 700க்கும் மேலான கடைகள்! பிரம்மாண்டம்...!
எழுதியவர்களுக்கு (விலையில் அல்ல) இலாபத்தில் பாதி பங்குப் பணமாவது கிடைப்பது உறுதி என்றால், ஏழை எழுத்தாளர்களே
தமிழ்ச்சாதியில் இல்லை என்று கொட்டலாம் முரசு!அப்படி இருக்கிறது நூலகளின் விலை!
எல்லாமே அப்படித்தான்யா.. என்று நீங்க சொல்லுவது
எனக்குக் கேட்கிறது. ஆனால் இவற்றை எல்லாம்
சொல்லவும் சிந்திக்கவும் செய்திடும் நூலகளுக்கே இந்த
நிலை என்பதுதான் வேதனை!
அடுத்த புத்தகக் காட்சியிலாவது, கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, சிற்றிதழ் என்ற
வகைப்பாட்டில் ஒரு வீதி முழுவதும் இலக்கிய வகை அடிப்படையில் கடைகள் வையுங்கள்.
Wednesday, December 26, 2012
Wednesday, December 19, 2012
அரசு சார்ந்தவரென்றால் அதிகமாகிவிடுமா...தகுதி?
தவறுகள் தட்டிக் கேட்கப்பட வேண்டும் - என்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின். பாரதியாரின் பிறந்தநாள் உரையினைப் படித்த உற்சாகத்தில், நடுப்பக்கக் கட்டுரை (12-12-12) ”துணைவேந்தரைத் தெரிவு செய்ய...” - முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களது கட்டுரை படித்தேன். விருந்துணவு படைத்த இலையில் விடம் வைத்தது போல் உள்ளது கண்டு இக்கடிதம் எழுதுகிறேன்.
பல்கலைக்கழகம் என்றால் என்ன? துணைவேந்தர் பொறுப்பு எத்தகையது? துணைவேந்தரைத் தேர்வு செய்வது எப்படி? என்ற வினாக்களைப் பின்னிறுத்தி, விடையளித்துள்ளார் கட்டுரை ஆசிரியர். இந்த செவியறிவுறூஉ... உரையில், ’தேர்ந்தெடுப்பது’ ’ஆய்ந்தெடுப்பது’ முதலான சொல்லாடல்களையும் அவற்றையே விளக்க உத்திகளாகவும் கையாண்டவர் தம் சொற்களில் அவற்றைப் புறக்கணித்தமை வருத்தமளிக்கிறது. செல்வாக்கிலும் சிபாரிசுகளிலும் சிம்மாசனம் ஏறிவிடும் கல்விமான்கள் காசு சேர்த்து, காலம் கழித்துச் செல்லும் பொழுதுபோக்காக துணைவேந்தர் பதவிகள் போய்விடக்கூடாது என்று மன்னருக்குப் புலவர் அறிவுறுத்துவது சரிதான், ஆனால், சுயநிதிக்கல்லூரி ஆசிரியர்களை (பேராசிரியர்கள் என்று கூடக் கட்டுரையில் குறிப்பிடத் தயங்கி) துணைவேந்தராக்கினால், ”அப்பதவி கொச்சைப்படுத்தப் படும்” என்றும் ”எதிர்காலம் இருண்டு போகும்” என்றும் அரசு தன் பொறுப்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களுக்குத் தான் அப்பதவி தகுதிவாய்ந்தது என வாதிடுவதும். வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே நிதி நெருக்கடிகளில் மூச்சுத்திணறும் பல்கலைக்கழகங்களுக்கு, தங்களின் மிகுதியான துறைகளின் இணைப்புக் கட்டணங்களாலும், அதிகமான மாணவர் சேர்க்கைக் கட்டணங்களாலும், தேர்வு மற்றும் இதரக் கட்டணங்களாலும் சுயநிதிக்கல்லூரிகள் தான் அவ்வப்போது பல்கலைக்கழகத்திற்கு சுவாசக்காற்றளிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களை உதாரணத்திற்கு, அது ஒரு என்.எஸ்.எஸ். திட்டமாக இருந்தாலும், சிரமேற்கொண்டு செவ்வனே செய்து முடிப்பது சுயநிதிக்கல்லூரிகள்தான். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுதவி பெறும் கல்லூரிகளை விட பன் மடங்கு புதிய பட்டவகுப்புகள், புதிய வசதிகள், போதுமான பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள், வளாக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இன்று அரசு கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்புகளைப் பெறும் பலரும் பணியாற்றிய அனுபவமும் தகுதியையும் வளர்த்துக் கொண்ட இடம் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தான். இதற்கு கட்டுரையாசிரியரும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் 200 க்கு மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 கலை அறிவியல் கல்லூரிகளும் சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. குறைவான ஊதியத்தில் அதிகமான நேரம் பணியாற்றி, அறிவும் திறனும் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோதும், சுயநிதிக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிறப்பும் பொறுப்பும் நிறைந்த மேலாண்மைத் திறனற்றவர்கள் என்று கட்டுரையாளர் கருதுவது நியாயமற்றது. கட்டுரையாளர் பெருமையாகக் கருதும் அரசு சார்ந்த அப்பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதும் சுயநிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்து கொள்வதை எவ்வாறு கருதுகிறார்? அங்கே அவர்களால் முடியாத பலவற்றை இங்கே சாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?. ஒரு அரசாங்கமோ.. பல்கலைக்கழகமோ செய்ய முடியாத பல ஆய்வுகளை, கருத்தரங்குகளை, மாநாடுகளை, சமூகப் பயன்பாடுகளை சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் சாதித்துக் காட்டுவதை, அன்றாடம் செய்தி ஊடகங்களை அக்கறையுடன் பார்ப்பவர்கள் அறிவார்கள். போகிறபோக்கில் சுயநிதிக் கல்வியாளர்களை இழிவுபடுத்தும் அரசியல் நுழைவு சரியானதல்ல.
கட்டுரையாளருக்கு எதிர்வினையாக அரசு சார்ந்த கல்வி நிறுவன மாணவர்களையும் பேராசிரியர்களையும் குறைத்து மதிப்பிடவில்லை. கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து வந்துவிட்ட சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் இன்று காலத்தின் கட்டாயம், நல்ல மனிதர்கள் நல்ல நோக்கங்களுடன் கல்விப் பணியைத் தொடங்கி வெற்றி கண்டு வருகிறார்கள். மாறாக அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் கவலைகிடமாகக் கிடக்கின்றன. கட்டுரையாசிரியர் இருபதாண்டுகளுக்குப் பின் பிறந்திருந்தால் ஒரு சுயநிதி கல்வி நிறுவனத்தில் படித்திருக்கும் வாய்ப்புக் நேர்ந்திருக்கும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததைப் போல. பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவில், ஆட்சி மன்றக்குழுவில், ஆட்சிக்குழுவில், பாடத்திட்டக்குழுவில், தேர்வுப்பணியில் மிகுதியானப் பங்கேற்பில், பயிற்சியில், செயலில், அனுபவத்தில் திறன் வெளிப்படுத்தும் சுயநிதிக் கல்வி நிறுவனத்தார்களால் ஏன் துணைவேந்தர் பொறுப்பிலும் தகுதி பெறமுடியாது?
மூன்று பட்ட வகுப்புகளுடன் தொடங்கும் சுயநிதிக்கல்லூரியை முதுகலைகள் உட்பட முப்பது துறைகளுடன் முன்னேற்றி, ஆய்வுத்துறைகளுடன் அக்கல்லூரியை ஒரு பல்கலைக்கழக அளவிற்கு உயர்த்தி அப்பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கும் முன்னோடிகளாகும் சுயநிதிக் கல்வி நிறுவனக் கல்வியாளர்கள் திறமையும் பொறுப்பும் அற்றவர்களா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் பொறுப்பு வகித்த 160 ஆண்டு கால வரலாற்றுப் பல்கலைக்கழகம் பழுதின்றி, குறைபாடுகளற்ற புகழொடுதான் திகழ்கின்றதா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் வருங்காலத்தில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இருந்தும் வருபவர்களாக இருப்பதை மறுக்கமுடியுமா? தடுக்க நினைப்பது தவறாகாதா?
-பேரா.சு.தளபதி,
தமிழ்த்துறைத்தலைவர்,
எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி. காட்டாங்குளத்தூர்.

Subscribe to:
Posts (Atom)